மாணவர்கள் மின்னியல் (digital) உலகில் முன்னேறப் புதிய பாடத்திட்டம்
திங்கட்கிழமை, 21 நவம்பர் 2022
அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் நிபுணர்களை உருவாக்குவதுதான் இன்று வெளியிடப்பட்ட புதிய கணினி சார்ந்த தொழில்நுட்பப் பாடத்திட்டத்தின் மையமாக உள்ளது.
இது நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கத்தின் ஒரு தலைமுறைக்கான மிக விரிவான பாடத்திட்டச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக வருகிறது.
மிக வேகமாக மாறிவரும் மின்னியல் உலகில், எதிர்கால வேலைகளுக்கு மாணவர்கள் தயாராக இருப்பதை புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டம் உறுதி செய்கிறது என்று கல்வி மற்றும் ஆரம்பக் கற்றலுக்கான அமைச்சர் சாரா மிட்செல் (Sarah Mitchell) கூறினார்.
“மாணவர்கள் மின்னியல் உலகில் தங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், எதிர்கால வாழ்க்கைத் தொழிலில் வளர்ச்சியடைவதற்கும் இன்றியமையாத கணினி சார்ந்த திறன்களைப் பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும்,” என்று திருமதி மிட்செல் (Ms Mitchell) கூறினார்.
“உயர்நிலைப் பள்ளியின் ஆரம்பத்திலிருந்தே, மாணவர்கள் குறியீட்டு முறை (coding), இணையப் பாதுகாப்பு (cyber security) மற்றும் வணிகங்களுக்கான தகவல் அமைப்புகளின் (information systems) அடிப்படைத் திறன்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதே இந்தப் புதிய பாடத்திட்டங்களின் நோக்கமாகும்.
“நவீன கணினி சார்ந்த தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறையின் எதிர்பார்ப்புகளைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் வகையில் இப்பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் நியூ சவுத் வேல்ஸில் அடுத்த தலைமுறைக்கான அறிவுக்கூர்மையுள்ள தொழில்நுட்ப நிபுணர்களை நாம் உருவாக்குகிறோம்.”
11 மற்றும் 12 -ஆம் வகுப்புகளுக்கான புதிய தொழில்முனைவு கணினியியல் (Enterprise Computing) மற்றும் மென்பொருள் பொறியியல் (Software Engineering) பாடத்திட்டங்கள் மூலம் 2025 -ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் இணையவழியாக அதிகமான ஹெச்.எஸ்.சி. தேர்வுகளில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
“நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கமானது பள்ளிப் பாடங்கள் மற்றும் ஹெச்.எஸ்.சி.யை நவீன யுகத்திற்கு கொண்டு வருகிறது, அத்துடன் நமது வேகமாக மாறிவரும் மின்னியல் உலகை அதனுடன் இணைக்கும் புதிய பாடத்திட்டங்களையும்தான்,” என்று திருமதி மிட்செல் (Ms Mitchell) கூறினார்.
“உலகத்தரம் வாய்ந்த தகுதியுடன் இருப்பதற்கு, ஹெச்.எஸ்.சி.யை நவீனமயமாக்குவது அவசியமாகும். தற்போது ஒரு பாடத்தில் மட்டுமே கணினியில் தேர்வு நடத்தப்பட்டாலும், இது நாம் வாழும் இணைய உலகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும்.
வாடிக்கையாளர் சேவை மற்றும் மின்னியல் அரசாங்கத்திற்கான அமைச்சர் விக்டர் டொமினெல்லோ (Victor Dominello), கூறுகையில், நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் 21 -ஆம் நூற்றாண்டிற்கான திறன்களை மாநிலத்திற்கு வழங்க உறுதிபூண்டுள்ளது என்றார்.
“எங்கள் குழந்தைகள் உலகத்தைத் தங்கள் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், மேலும் இந்த முன்னெடுப்பானது எதிர்கால மின்னியல் பணியாளர்களை உருவாக்க எங்களுக்கு உதவும்” என்று திரு டொமினெல்லோ (Mr Dominello) கூறினார்.
புதிய பாடத்திட்டங்களின் முக்கிய அம்சங்களில் பின்வருவன அடங்கும்:
- இணையப் பாதுகாப்பு (cyber safety) மற்றும் இணைய உத்தரவாதம் (cyber security) பற்றிய பொருளடக்கத்தில் அதிகக் கவனம் செலுத்துதல்.
- எதிர்கால STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பற்றிய படிப்பு மற்றும் வாழ்க்கைத் தொழிலில் தெளிவான பாதைகளை உருவாக்க, கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பிற பாடங்களில் கற்றலுக்கான நெருங்கிய இணைப்புகள்.
- அனைத்து உயர்கல்வி மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டின் ஒரு பகுதியாக, ஆழ்ந்த கற்றல் மற்றும் செயல்திட்டத் திறன்களை மேம்படுத்துவதற்கு ஒரு புதிய கட்டாயச் செயல்திட்டத்தைச் செய்வார்கள்.
புதிய நெறிப்படுத்தப்பட்ட புவியியல் 11 மற்றும் 12 -ஆம் வகுப்புக்கான பாடத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன, அவை குழப்பங்களை நீக்கி, அத்தியாவசியக் கற்றலில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த அனுமதிக்கிறது, இதனால் மாணவர்கள் உலகளாவிய குடிமக்களுக்குத் தெரிவிக்கப்படும் திறன், அறிவு மற்றும் புரிதலைப் பெறுகிறார்கள்.
கூடுதலாக, நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் மழலையர் பள்ளி முதல் 10 -ஆம் வகுப்பு வரை புதிய செம்மொழி மற்றும் நவீன மொழிகள் பாடத்திட்டங்களை வெளியிட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பாடத்திட்டச் சீர்திருத்தங்களை வழங்குவதற்குப் பொறுப்பான நியூ சவுத் வேல்ஸ் கல்வித் தர ஆணையமானது, புதிய பாடத்திட்டங்களைச் செயல்படுத்தி இணையவழி ஹெச்.எஸ்.சி. தேர்வுகளுக்குத் தயாராகும் போது, பள்ளிகளுக்கு ஆதரவுப் பொருட்களை வழங்கும்.
2023 -ஆம் ஆண்டில் ஆசிரியர்கள் திட்டமிடுவதற்காகப் புதிய பாடத்திட்டங்கள் இணையப் பாடத்திட்ட மேடையில் இப்போது கிடைக்கின்றன, அவை 2024 -ஆம் ஆண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ் பள்ளிகளில் கற்பிக்கப்படும்.
Samantha McGill | 0419 840 643