நியூ சவுத் வேல் அரசாங்கத்தின் சீர்திருத்தச் செயல்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது

eLanka admin
2 Min Read

சனிக்கிழமை, 19 நவம்பர் 2022

 

நியூ சவுத் வேல் அரசாங்கத்தின் சீர்திருத்தச் செயல்திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம், முதன்முதலாய் வீடு வாங்குபவர்கள், பெண்களுக்கான பாதுகாப்பு, மேம்பட்ட ஒருமைப்பாடு மற்றும் இயற்கைப் பேரழிவுகளுக்குப் எதிர்வினையாற்றுவது மற்றும் மீண்டெழுவது போன்ற வரலாற்றுச் சிறப்புவாய்ந்த சீர்திருத்தங்களைத் தொடர்ந்து வழங்குவதற்கு ஆண்டின் இறுதி இரண்டு அமர்வு வாரங்களை பயன்படுத்தியது.  

இந்தச் சீர்திருத்தங்கள், நியூ சவுத் வேல்ஸ் மக்களுக்கான பிரகாசமான எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் உறுதிப்பாட்டுடன் இருப்பதைக் காட்டுகிறது என்று முதலமைச்சர் டொமினிக் பெரோட்டெட் (Dominic Perrottet) தெரிவித்தார்.

“நீங்கள் நகரத்தில் வாழ்ந்தாலும் அல்லது வனப்பகுதியில் வாழ்ந்தாலும், நியூ சவுத் வேல்ஸ் முழுவதும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பெரும் யோசனைகளைக் கொண்ட ஒரு அரசாங்கம் இது,” என்று திரு பெரோட்டெட் (Mr Perrottet) கூறினார்.   

“இந்தச் சீர்திருத்தங்கள் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். முதன்முதலாய் வீடு வாங்குபவர்கள் தங்கள் சொந்த வீட்டை விரைவில் தமக்கெனச் சொந்தமாக்கிக் கொள்வதற்கும், எங்களது தனித்துவமான கட்டாயக் கட்டுப்பாடு நீதிமுறையின் சீர்திருத்தங்கள் மூலம் நாங்கள் உயிரைக் காப்பாற்றுவதை உறுதிசெய்வதற்கும், அரசாங்கம் முழுவதும் ஒருமைப்பாட்டை மேம்படுத்தி, இயற்கை பேரழிவுகளுக்கு நமது எதிர்வினை மற்றும் மீண்டெழுதல் போன்றவற்றுக்கும் அவர்கள் உதவுவார்கள்.   

கடந்த இரண்டு வாரங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் பின்வருவன அடங்கும்:  

  • சொத்து வரி (முதன்முதலாய் வீடு வாங்குவோர் தெரிவு) மசோதா
  • குற்றங்கள் சட்டத் திருத்த (கட்டாயக் கட்டுப்பாடு) மசோதா
  • நியூ சவுத் வேல்ஸ் புனரமைப்பு ஆணைக்குழு மசோதா
  • குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்தம் (குடும்பம் என்பது கலாச்சாரம்) மசோதா
  • பழங்குடியின நில உரிமைகள் திருத்த மசோதா
  • குற்றங்கள் திருத்த (குற்றவியல் எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு) மசோதா
  • மாவட்ட நீதிமன்றத் திருத்த மசோதா
  • மருந்துகள், நச்சுப் பொருட்கள் மற்றும் சிகிச்சைப் பொருட்கள் மசோதா
  • தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்புத் திருத்த மசோதா
  • மீன்வள மேலாண்மை திருத்த மசோதா
  • அரசுத் துறை தணிக்கை மற்றும் பிற சட்டத் திருத்த மசோதா
  • ஒருமைப்பாடு சட்டத் திருத்த மசோதா
  • ‘பாயிண்ட் டு பாயிண்ட்’ (Point to Point) போக்குவரத்து (வாடகைக் கார்கள் (‘டாக்ஸிகள்’) மற்றும் வாடகை வாகனங்கள்) திருத்த மசோதா
  • கருவூலம் மற்றும் எரிசக்தி சட்டத் திருத்த மசோதா
  • மின்னணு உரிமை மாற்றல் அமலாக்க மசோதா
  • கட்டடம் மற்றும் பிற நியாயமான வர்த்தகச் சட்டதம் திருத்த மசோதா
  • அரசுத் துறை வேலைவாய்ப்புத் திருத்த மசோதா
  • மோட்டார் விபத்துக் காயங்கள் திருத்த மசோதா

MEDIA: Clem Hall | Premier | 0499 818 662

 

Download the PDF file .

Share This Article